நெல்லை காந்திய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய சர்வ சேவா சங்கம், தீபம் அறக்கட்டளை, சின்பேடு கூட்டமைப்பு சார்பில் 62ம் ஆண்டு காந்திய அமரத்துவ தின விழா மற்றும் சர்வோதய தின விழா நெல்லையில் நடந்தது.
சர்வோதய தின விழா
நெல்லை 7.2.2010
நெல்லை காந்திய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய சர்வ சேவா சங்கம், தீபம் அறக்கட்டளை, சின்பேடு கூட்டமைப்பு சார்பில் 62ம் ஆண்டு காந்திய அமரத்துவ தின விழா மற்றும் சர்வோதய தின விழா நெல்லையில் நடந்தது.
விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வந்திருந்த இளைஞர்கள் சைக்கிள் பேரணியாக நெல்லை மாநகராட்சி 55 வார்டு பகுதியிலும் காந்திய கொள்கைகளை விளக்கினர். நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் "காந்திய கொள்கைகளை" விளக்கும் கருத்தரங்கம் நடந்தது. நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் காந்தியின் கொள்கைகளை துண்டு பிரசுரங்களாக விளக்கிய குழுவினர் நெல்லை டவுன் சந்திவிநாயகர் கோயில் காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்து சைக்கிள் பேரணியை நிறைவு செய்தனர்.
நெல்லை சங்கீத சபாவில் நடந்த காந்தி அமரத்துவ தின விழாவிற்கு மகாத்மா காந்தி சேவா மைய நிறுவனர் விவேகானந்தன் தலைமை வகித்தார். நெல்லை சங்கீத சபா செயலாளர் நடேசன், பொதிகை இலக்கிய வட்டம் நிறுவனர் தளவாய் ராமசாமி, லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, சின்பேடு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தனர். காந்திய மன்றம் பொருளாளர் அருணாசிவாஜி இறைவணக்கம் பாடினார். சர்வோதய மண்டலம் மாவட்ட செயலாளர் குமாரசாமி வரவேற்றார்.இன்றைய இளைஞர்களுக் காந்திய அரசியல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் அகில இந்திய சர்வோதய சங்க துணைத்தலைவர் டாக்டர் கண்ணன், காந்திஜியும், பூரண மதுவிலக்கு கொள்கையும் என்ற தலைப்பில் காந்திஜி மன்ற தலைவர் ராமையா, காந்திஜியும்-கிராம சுய ராஜ்ஜியமும் என்ற தலைப்பில் லட்சுமணன், காந்திஜி விரும்பிய பெண்கள் சுதந்திரம் என்ற தலைப்பில் மஹமூதா அமானுல்லா பேசினர்.காந்திய பொருளாதார மேதை குருசாமி கருத்துரை வழங்கினார்.
70 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று காந்திய கொள்கைகளை பொதுமக்களுக்கு விளக்கிய இளைஞர்களுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டிய ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., வால்டர் தேவாரம் பேசியதாவது:காந்தியின் கொள்கைகளை இளைஞர்கள் பின்பற்றவேண்டும். விளையாட்டு துறையின் மூலமாக நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பணியில் நான் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறேன். நெல்லை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மையம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இதன் பணிகள் கிராமங்கள் தோறும் பரவவேண்டும். மகாத்மா காந்தியின் கொள்கைகள் அனைவரும் பின்பற்றவேண்டும். காந்தி ஜெயந்தி, நினைவு தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், உப்பு சத்தியாகிரக தினம் என காந்தியை ஆண்டுக்கு 3 முறை தான் நினைவு கொள்கிறோம். மகாத்மா காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். அவரது தியாகங்களையும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஜாதி, மத வேறுபாடு இல்லாமலும், பயங்கரவாதம் ஒழியவும், சமூக விரோத சக்திகள் ஒடுக்கப்படவும் காந்தியின் கொள்கைகள் தீவிரமடையவேண்டும்.இவ்வாறு தேவாரம் பேசினார்.நிகழ்ச்சியில் 70 கிலோ மீட்டர் சைக்கிள் பிரசாரம் செய்த வேலுமயில் நாடார் பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன் ராம்கணேஷிற்கு சான்றிதழ், மதுவை ஒழிக்க பாடுபட்டு வரும் திருச்செங்கோடு வக்கீல் தங்கவேலுவுக்கு சிறந்த சத்தியாகிரகவாதி விருது, தியாகி நெல்லை சுப்பையாவுக்கு காந்திய செம்மல் விருதுகளை ஓய்வு பெற்ற டி.ஜி.பி., தேவாரம் வழங்கினார். இதில் கட்டட தொழிலளார் சங்க மாவட்ட தலைவர் வேல்சாமிப்பாண்டியன், காந்திய தலைவர் பாதமுத்து, காந்திய மன்ற நிறுவனர் ராமச்சந்திரன், தீபம் அறக்கட்டறை இயக்குனர் பால்ராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, காந்திமன்ற செயலாளர் கந்தசாமி, மூத்த குடிமக்கள் மேம்பாட்டு பேரவை செயலாளர் முத்துசாமி, நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் காஜா முகைதீன், அப்துல்அஜீஸ், திருமாறன் மற்றும் சங்கரன்கோவில் மடத்தை சேர்ந்த 4 புத்த பிட்சுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கொம்பு திருக்கை மீன்
தூத்துக்குடி, சகாயமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவர் தனக்கு சொந்தமான படகு மூலம் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல பீட்டர், தலைமையில் 8 மீனவர்கள் தூத்துக்குடியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2மணி அளவில், இவர்களின் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியது. பெரிய மீனுடன் ஏற்கனவே இவர்களது வலையில் சிக்கிய சிறிய மீன்களுடன் உடனடியாக இவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பியதும் வலையை பிரித்து பார்த்தபோது, அந்த மீன் ராட்சத கொம்பு திருக்கை. சாதாரணமாக திருக்கை மீன் சிறிய அளவில்தான் கிடைக்கும். ஆனால், இந்த மீன் 3.8டன் எடையுடன் ராட்சத உருவத்துடன் இருந்ததால் மீனவர்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். இந்த மீனை மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து ஏலம் விட்டனர். இந்த ரூ.5ஆயிரத்திற்கு ஏலம் எடு்க்கப்பட்டது.இவ்வகை மீனை உணவிற்காக பயன்படுத்த முடியாது. மருந்து மற்றும் உரத்திற்காக இதை பயன்படுத்தலாம் என மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment