பருவநிலை மாற்ற கருத்தரங்கம்ராமநாதபுரம், பிப். 11:
ராமநாதபுரத்தில் இர்வோ, பேட், ரெய்ஸ் இந்தியா அறக்கட்டளை, ஆர்சிபிஇடி இணைந்து சின்பேட் கூட்டமைப்பு சார்பில், `மக்களின் பார்வையில் பருவ நிலை மாற்றம்‘ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
சின்பேட் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். சமுதாய முன்னேற்றத்திற்கான குழந்தைகள் திட்ட இயக்குநர் பிளாரன்ஸ், ஊராட்சி தலைவர்கள் மாரியம்மாள்(கஞ்சியேந்தல்), பாலம்மாள்(ஏனாதிக்கோட்டை), முகவை மகளிர் கூட்டமைப்பு அமைப்பாளர் சித்ரா, ஆர்சிபிஇடி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் திபுர்சியஸ் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் உட்பட பலர் பேசினர்.

No comments:
Post a Comment